MUT 78

மாயனை ஓது: அதுவே பெருங்காவல்

2359 அரணாம்நமக்கென்றும் ஆழிவலவன் *
முரனாள்வலஞ் சுழிந்தமொய்ம்பன் * - சரணாமேல்
ஏதுகதி? ஏதுநிலை? ஏதுபிறப்பு என்னாதே *
ஓதுகதி மாயனையேயோர்த்து.
2359 அரண் ஆம் நமக்கு என்றும் * ஆழி வலவன் *
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் ** சரண் ஆமேல்
ஏது கதி? ஏது நிலை? * ஏது பிறப்பு? என்னாதே *
ஓது கதி மாயனையே ஓர்த்து 78
2359 araṇ ām namakku ĕṉṟum * āzhi valavaṉ *
muraṉ nāl̤ valam cuzhinta mŏympaṉ ** - caraṇ āmel
etu kati? etu nilai? * etu piṟappu? ĕṉṉāte *
otu kati māyaṉaiye orttu 78

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-29, 32

Simple Translation

2359. We should not think, “Where is our refuge? Where can we go? Are we going to be born again and again?” Praise and worship the heroic lord who destroyed the strength of his enemies with his discus— he is our only refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஆழி சக்கரத்தை; வலவன் வலக்கையிலுடையவனும்; முரன் நாள் முரன் என்னும் அசுரனின்; வலம் ஆயுள் வலிமையை; சுழிந்த போக்கினவனும்; மொய்ம்பன் மிடுக்கையுடய பெருமான்; சரண் ஆமேல் ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்; கதி ஏது? நம்முடைய ஞானமென்ன?; நிலை ஏது? ஒழுக்கமென்ன?; பிறப்பு ஏது? ஜன்மமென்ன?; என்னாதே என்று இகழாமல்; நமக்கு நமக்கு; என்றும் அரணாம் ரக்ஷகனாகவே இருப்பான்; மாயனையே ஆச்சர்ய குணங்களுடைய; கதி அப்பெருமானையே உபாயமாக; ஓர்த்து உறுதி பூண்டு; ஓது அவன் திருநாமங்களையே ஓதுவாயாக
āzhi the divine disc; valavan one who has on his right divine hand; muran the demon muran; nāl̤ caused by the lengthy life; valam strength; suzhindha one who removed; moymban emperumān who is strong; saraṇ ām ĕl if he becomes the protector; gadhi ĕdhu nilai ĕdhu piṛappu ĕdhu ennādhĕ instead of despising “What is our knowledge? What is our status? What is our birth?” (īnstead of looking at the lowliness of these); namakku enṛum araṇ ām one who is our protector at all times; māyanaiyĕ (ŏh heart!) that emperumān alone, who has amaśing auspicious qualities and activities; gadhi as means; ŏrththu being steadfast; ŏdhu recite his divine names.