MUT 79

திருமாலை நினை: பிறப்பே இராது

2360 ஓர்த்தமனத்தராய் ஐந்தடக்கியாராய்ந்து *
பேர்த்தால்பிறப்பேழும்பேர்க்கலாம் * - கார்த்த
விரையார்நறுந்துழாய் வீங்கோதமேனி *
நிரையாரமார்வனையேநின்று.
2360 ortta maṉattarāy * aintu aṭakki ārāyntu *
perttāl piṟappu ezhum perkkalām ** - kārtta
virai ār naṟum tuzhāy * vīṅku ota meṉi *
nirai āra mārvaṉaiye niṉṟu 79

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2360. If devotees control their five senses and keep in their minds only the dark ocean-colored lord with a fragrant thulasi garland on his chest they will not be born again.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார்த்த பசுமையான; விரையார் மணமுள்ள; நறும் நல்ல செவ்வியான; துழாய் துளசிமாலை உடையவனும்; வீங்கு ஓத கடல் போன்ற; மேனி திருமேனி உடையவனும்; நிரை நிறைந்த; ஆர ஹாரங்கள் அணிந்த; மார்வனையே மார்புடைய பெருமானை; நின்று நிலைத்து நின்று; ஓர்த்த தியானிக்கும்; மனத்தராய் மனமுடையவர்களாய்; ஐந்து அடக்கி ஐம்புலன்களையும் அடக்கி; ஆராய்ந்து உலக இன்பத்தின் தீமைகளை ஆராய்ந்து; பேர்த்தால் அதிலிருந்து மனதைத் திருப்பினால்; பிறப்பு ஏழும் ஏழு பிறப்பையும்; பேர்க்கலாம் போக்கிவிடலாம்
kārththa having verdant colour; virai ār being fragrant; naṛum thuzhāy having garland of fresh thul̤asi; vīngu ŏdha mĕni having the complexion of a full ocean; nirai āram mārvanaiyĕ only emperumān who has donned ornaments in an orderly way; ninṛu standing firmly; ŏrththa manaththarāy having a meditating mind; aindhu adakki winning over the five senses; ārāyndhu analysing the lowliness of samsāram (materialistic realm); pĕrththāl if one were to turn his face away [from samsāram]; piṛappu ĕzhum the long line of births which keep coming one after another; pĕrkkalām one can get rid of