Punyāvrtha, Veekshāranya Kshetram, Thiruvallur
Your browser does not support the audio element.
audio
1058 காசையாடைமூடியோடிக் காதல்செய்தானவனூர் *
நாசமாகநம்பவல்ல நம்பிநம்பெருமான் *
வேயினன்னதோள்மடவார் வெண்ணெயுண்டான் இவனென்று *
ஏசநின்றஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே. (2)
1059 தையலாள்மேல்காதல்செய்த தானவன்வாளரக்கன் *
பொய்யிலாதபொன்முடிகள் ஒன்பதோடொன்றும் * அன்று
செய்தவெம்போர்தன்னில் அங்கோர்செஞ்சரத்தால்உருள *
எய்தஎந்தைஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1060 முன்ஓர்தூது வானரத்தின்வாயில்மொழிந்து * அரக்கன்
மன்னூர்தன்னை வாளியினால்மாளமுனிந்து * அவனே
பின்ஓர்தூது ஆதிமன்னர்க்காகி, பெருநிலத்தார் *
இன்னார்தூதனெனநின்றான் எவ்வுள்கிடந்தானே.
1061 பந்தணைந்தமெல்விரலாள் பாவைதன்காரணத்தால் *
வெந்திறலேறேழும் வென்றவேந்தன், விரிபுகழ்சேர் *
நந்தன்மைந்தனாகவாகும் நம்பிநம்பெருமான் *
எந்தைதந்தைதம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1062 பாலனாகிஞாலமேழும்உண்டு பண்டு ஆலிலைமேல் *
சாலநாளும்பள்ளிகொள்ளும் தாமரைக்கண்ணன், எண்ணில் *
நீலமார்வண்டுண்டுவாழும் நெய்தலந்தண்கழனி *
ஏலநாறும்பைம்புறவில் எவ்வுள்கிடந்தானே.
1063 சோத்தநம்பியென்று தொண்டர்மிண்டித் தொடர்ந்தழைக்கும் *
ஆத்தனம்பிசெங்கணம்பி ஆகிலும்தேவர்க்கெல்லாம் *
மூத்தனம்பிமுக்கணம்பிஎன்று முனிவர்தொழுது
ஏத்தும் * நம்பிஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1064 திங்களப்புவானெரிகாலாகி * திசைமுகனார்
தங்களப்பன்சாமியப்பன் பாகத்திருந்த * வண்டுண்
தொங்கலப்புநீண்முடியான் சூழ்கழல்சூடநின்ற *
எங்களப்பன்எம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1065 முனிவன்மூர்த்திமூவராகி வேதம்விரித்துரைத்த
புனிதன் * பூவைவண்ணன் அண்ணல்புண்ணியன் விண்ணவர்கோன் *
தனியன்சேயன்தானொருவனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் * எந்தைஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1066 பந்திருக்கும்மெல்விரலாள் பாவைபனிமலராள் *
வந்திருக்கும்மார்வன்நீல மேனிமணிவண்ணன் *
அந்தரத்தில்வாழும் வானோர்நாயகனாயமைந்த *
இந்திரற்கும்தம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1067 இண்டைகொண்டுதொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை *
வண்டுபாடும்பைம்புறவின் மங்கையர்கோன்கலியன் *
கொண்டசீரால்தண்தமிழ்செய்மாலை ஈரைந்தும்வல்லார் *
அண்டமாள்வதுஆணை அன்றேல்ஆள்வர் அமருலகே. (2)
2417 நாகத்தணைக்குடந்தை வெஃகாதிருவெவ்வுள் *
நாகத்தணையரங்கம் பேரன்பில் * - நாகத்
தணைப்பாற்கடல்கிடக்கும் ஆதிநெடுமால் *
அணைப்பார்கருத்தனாவான்.
2773 மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி *
என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை *
கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை *
மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற்
பொன்னை * மரதகத்தைப் புட்குழியெம்போரேற்றை *
மன்னுமரங்கத்துஎம்மாமணியை * -