மணத்தையும், ஒளியையுங்கொண்டு, பூவையும், ரத்நத்தையும் விரும்புமாபோலே, சேஷமென்று ஆத்மாவை ஆதரிக்கிறது. அல்லாதபோது ‘’உயிரினாற்குறைவிலம்’’ என்கிறபடியே த்யாஜ்யம்; அது தோன்ற சேஷத்வத்தைச் சொல்லிப் பின்னை ஆத்மாவைச் சொல்லுலொறது.