உறக்கந்தலைக் கொண்ட பின்னை மறை நான்குமுணர்ந்த தங்களப்பனோடே யோதின சந்தச்சதுமுகன் சலங்கலந்த வெண்புரிநூல் மானுரி திரிதந்துண்ணும் காமனுடலிருக்கிலங்கு ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப்போலே ஆதுமில் காலத்தெந்தையான வாய்முதலப்பன் பிரமகுருவாய் இராப்பகல் முன்சொல்லக் கற்றனமே யென்றவிவரும் நாவினால் நன்மையாலென்று ஓதவல்ல பிராக்களைக் கன்மின்க ளென்று சொல் பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே ஆதர்வணாதிகள்போலே இதுவும் பேர்பெற்றது.