Chapter 1

Āzhvār instructs us to get rid of kinsfolk acquired due to our karma but associate oneself with the Lord, who in all aspects, is our all encompassing kinsfolk (கொண்ட பெண்டிர்)

கர்மவசத்தால் கிட்டிய பந்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)
This segment of Thiruvāymozhi's divine intent is to remove the delusion in those who believe, ‘In this world, only kinsfolk will protect me’. emperumān is the one and only protector irrespective of what situation one finds themselves in. Āzhvār emphasizes that those we assume as our kinsfolk are not our true protectors.
‘உலகில், உறவினர்களே நம்மைக் காப்பவர்கள்’ என்று நம்பி இருப்பவர்களின் மருள் நீங்குமாறு அருளிச் செய்தது இத்திருவாய்மொழி. எந்த நிலையிலும் எம்பெருமான் ஒருவனே ரக்ஷகன். உறவினர்களாக நினைக்கப்படுகிறவர்கள் உண்மையான ரக்ஷகர்கள் அல்லர் என்று ஈண்டு ஆழ்வார் உணர்த்துகிறார்.

ஒன்பதாம் பத்து -முதல் + Read more
Verses: 3673 to 3683
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will be like our esteemed ancestors
  • TVM 9.1.1
    3673 ## கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் * சுற்றத்தவர் பிறரும் *
    கண்டதோடு பட்டது அல்லால் * காதல் மற்று யாதும் இல்லை **
    எண் திசையும் கீழும் மேலும் * முற்றவும் உண்ட பிரான் *
    தொண்டரோமாய் உய்யல் அல்லால் * இல்லை கண்டீர் துணையே (1)
  • TVM 9.1.2
    3674 துணையும் சார்வும் ஆகுவார் போல் * சுற்றத்தவர் பிறரும் *
    அணைய வந்த ஆக்கம் உண்டேல் * அட்டைகள்போல் சுவைப்பர் **
    கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த * எம் கார் முகிலை *
    புணை என்று உய்யப் போகல் அல்லால் * இல்லை கண்டீர் பொருளே (2)
  • TVM 9.1.3
    3675 பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் * போற்றி என்று ஏற்று எழுவர் *
    இருள்கொள் துன்பத்து இன்மை காணில் * என்னே என்பாரும் இல்லை **
    மருள்கொள் செய்கை அசுரர் மங்க * வடமதுரைப் பிறந்தாற்கு *
    அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் * இல்லை கண்டீர் அரணே (3)
  • TVM 9.1.4
    3676 அரணம் ஆவர் அற்ற காலைக்கு * என்று என்று அமைக்கப்பட்டார் *
    இரணம் கொண்ட தெப்பர் ஆவர் * இன்றியிட்டாலும் அஃதே **
    வருணித்து என்னே * வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *
    சரண் என்று உய்யப் போகல் அல்லால் * இல்லை கண்டீர் சதிரே (4)
  • TVM 9.1.5
    3677 சதுரம் என்று தம்மைத் தாமே * சம்மதித்து இன்மொழியார் *
    மதுர போகம் துற்றவரே * வைகி மற்று ஒன்று உறுவர் **
    அதிர்கொள் செய்கை அசுரர் மங்க * வடமதுரைப் பிறந்தாற்கு *
    எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் * இல்லை கண்டீர் இன்பமே (5)
  • TVM 9.1.6
    3678 இல்லை கண்டீர் இன்பம் அந்தோ * உள்ளது நினையாதே *
    தொல்லையார்கள் எத்தனைவர் * தோன்றிக் கழிந்தொழிந்தார் **
    மல்லை மூதூர் * வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *
    சொல்லி உய்யப் போகல் அல்லால் * மற்றொன்று இல்லை சுருக்கே (6)
  • TVM 9.1.7
    3679 மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் * மா நிலத்து எவ் உயிர்க்கும் *
    சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் * கண்டீர்கள் அந்தோ **
    குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் * வடமதுரைப் பிறந்தான் *
    குற்றம் இல் சீர் கற்று வைகல் * வாழ்தல் கண்டீர் குணமே (7)
  • TVM 9.1.8
    3680 வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ * மாயவன் அடி பரவி *
    போழ்து போக உள்ளகிற்கும் * புன்மை இலாதவர்க்கு **
    வாழ் துணையா * வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *
    வீழ் துணையாப் போம் இதனில் * யாதும் இல்லை மிக்கதே (8)
  • TVM 9.1.9
    3681 யாதும் இல்லை மிக்கு அதனில் * என்று என்று அது கருதி *
    காது செய்வான் கூதை செய்து * கடைமுறை வாழ்க்கையும் போம் **
    மா துகிலின் கொடிக்கொள் மாட * வடமதுரைப் பிறந்த *
    தாது சேர் தோள் கண்ணன் அல்லால் * இல்லை கண்டீர் சரணே (9)
  • TVM 9.1.10
    3682 கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் * சரண் அது நிற்க வந்து *
    மண்ணின் பாரம் நீக்குதற்கே * வடமதுரைப் பிறந்தான் *
    திண்ணமா நும் உடைமை உண்டேல் * அவன் அடி சேர்த்து உய்ம்மினோ **
    எண்ண வேண்டா நும்மது ஆதும் * அவன் அன்றி மற்று இல்லையே (10)
  • TVM 9.1.11
    3683 ## ஆதும் இல்லை மற்று அவனில் * என்று அதுவே துணிந்து *
    தாது சேர் தோள் கண்ணனை * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    தீது இலாத ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
    ஓத வல்ல பிராக்கள் * நம்மை ஆளுடையார்கள் பண்டே (11)