O Master! Call this Servant and Accept My Service.
அம்மானே! அடியேனைக் கூவிப் பணிகொள்
3613 வந்துதோன்றாயன்றேல் உன்வையம்தாயமலரடிக்கீழ் *
முந்திவந்துயான்நிற்ப முகப்பேகூவிப்பணிகொள்ளாய் *
செந்தண்கமலக்கண்கைகால் சிவந்தவாயோர்கருஞாயிறு *
அந்தமில்லாக்கதிர்பரப்பி அலர்ந்ததொக்குமம்மானே!