Chapter 3

Realizing the one who charmed her was the Lord of Thiruvinnagar - (நல்குரவும் செல்வும்)

தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)
Āzhvār wonders, “I was stubborn not to unite with Him, but He forcefully united me.” emperumān declares His ability to do rare deeds and indicates His throne that is situated in Thiruvinnagar. Āzhvār rejoices in this new development. (Thiruvinnagar - Oppiliappan Temple)
“கூடேன் என்று இருந்த தம்மையும் எம்பிரான் வலிந்து கூட்டிக்கொண்டான்” என்பதை அறிந்த ஆழ்வார் வியக்கிறார். இவருக்கு எம்பெருமான் தனக்கே உரிய அரியன செய்யும் செயல் திறனை அறிவித்துக்கொண்டு, திருவிண்ணகரில் இருக்கும் இருப்பைக் காட்டினான். இந்நிலையைப் பேசி இன்பம் அடைகிறார் ஆழ்வார். (திருவிண்ணகர்-ஒப்பிலியப்பன் + Read more
Verses: 3365 to 3375
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: will become the gurus of the gods in the sky
  • TVM 6.3.1
    3365 ## நல்குரவும் செல்வும் * நரகும் சுவர்க்கமும் ஆய் *
    வெல்பகையும் நட்பும் * விடமும் அமுதமும் ஆய் **
    பல்வகையும் பரந்த * பெருமான் என்னை ஆள்வானை *
    செல்வம் மல்கு குடித் * திருவிண்ணகர்க் கண்டேனே (1)
  • TVM 6.3.2
    3366 கண்ட இன்பம் துன்பம் * கலக்கங்களும் தேற்றமும் ஆய் *
    தண்டமும் தண்மையும் * தழலும் நிழலும் ஆய் **
    கண்டுகோடற்கு அரிய * பெருமான் என்னை ஆள்வான் ஊர் *
    தெண் திரைப் புனல் சூழ் * திருவிண்ணகர் நல் நகரே (2)
  • TVM 6.3.3
    3367 நகரமும் நாடுகளும் * ஞானமும் மூடமும் ஆய் *
    நிகர் இல் சூழ் சுடர் ஆய் * இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் **
    சிகர மாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
    புகர் கொள் கீர்த்தி அல்லால் * இல்லை யாவர்க்கும் புண்ணியமே (3)
  • TVM 6.3.4
    3368 புண்ணியம் பாவம் * புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய் *
    எண்ணம் ஆய் மறப்பு ஆய் * உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய் **
    திண்ண மாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
    கண்ணன் இன் அருளே * கண்டுகொள்மின்கள் கைதவமே? (4)
  • TVM 6.3.5
    3369 கைதவம் செம்மை * கருமை வெளுமையும் ஆய் *
    மெய் பொய் இளமை * முதுமை புதுமை பழமையும் ஆய் **
    செய்த திண் மதிள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
    பெய்த காவு கண்டீர் * பெரும் தேவு உடை மூவுலகே (5)
  • TVM 6.3.6
    3370 மூவுலகங்களும் ஆய் * அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய் *
    பூவில் வாழ் மகள் ஆய் * தவ்வை ஆய்ப் புகழ் ஆய்ப் பழி ஆய் **
    தேவர் மேவித் தொழும் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
    பாவியேன் மனத்தே * உறைகின்ற பரஞ்சுடரே (6)
  • TVM 6.3.7
    3371 பரம் சுடர் உடம்பு ஆய் * அழுக்குப் பதித்த உடம்பு ஆய் *
    கரந்தும் தோன்றியும் நின்றும் * கைதவங்கள் செய்தும் ** விண்ணோர்
    சிரங்களால் வணங்கும் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
    வரம் கொள் பாதம் அல்லால் இல்லை * யாவர்க்கும் வன் சரணே (7)
  • TVM 6.3.8
    3372 வன் சரண் சுரர்க்கு ஆய் * அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய் *
    தன் சரண் நிழற்கீழ் * உலகம் வைத்தும் வையாதும் **
    தென் சரண் திசைக்குத் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
    என் சரண் என் கண்ணன் * என்னை ஆளுடை என் அப்பனே (8)
  • TVM 6.3.9
    3373 என் அப்பன் எனக்கு ஆய் * இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய் *
    பொன் அப்பன் மணி அப்பன் * முத்து அப்பன் அன் அப்பனும் ஆய் **
    மின்னப் பொன் மதிள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் *
    தன் ஒப்பார் இல் அப்பன் * தந்தனன் தன தாள் நிழலே (9)
  • TVM 6.3.10
    3374 நிழல் வெய்யில் சிறுமை பெருமை * குறுமை நெடுமையும் ஆய் *
    சுழல்வன நிற்பன * மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய் **
    மழலை வாய் வண்டு வாழ் * திருவிண்ணகர் மன்னு பிரான் *
    கழல்கள் அன்றி * மற்றோர் களைகண் இலம் காண்மின்களே (10)
  • TVM 6.3.11
    3375 ## காண்மின்கள் உலகீர் என்று * கண்முகப்பே நிமிர்ந்த *
    தாள் இணையன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    ஆணை ஆயிரத்துத் * திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் *
    கோணை இன்றி விண்ணோர்க்கு * என்றும் ஆவர் குரவர்களே (11)