I Do Not Want This Luster that Trivikrama Does Not Desire.
திரிவிக்கிரமன் விரும்பாத மினுமினுப்பு எனக்கு வேண்டாம்
3205 அறிவினால்குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய *
நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொரு மூர்த்தி *
குறியமாணுருவாகிக் கொடுங்கோளால்நிலங்கொண்ட *
கிறியம்மான்கவராத கிளரொளியால்குறைவிலமே.