Do Not Heed the Soothsayer's Words: Praise the Feet of Kaṇṇaṉ
கட்டுவிச்சி சொல் கேளாதீர்: கண்ணன் கழல் வாழ்த்துக
3180 இதுகாண்மின்அன்னைமீர்! இக்கட்டுவிச்சிசொற்கொண்டு * நீர்
எதுவானுஞ்செய்து அங்கோர்கள்ளுமிறைச்சியும் தூவேன்மின் *
மதுவார்துழாய்முடி மாயப்பிரான்கழல்வாழ்த்தினால் *
அதுவே இவளுற்றநோய்க்கும் அருமருந்தாகுமே.