Chapter 2

Mother laments for her daughter's separation from Bhagavān - (பாலன் ஆய்)

காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்
The sage advice and tenets expounded by Āzhvār to the people of the world invariably made Āzhvār’s heart brim and overflow with love and affection for Bhagavān even more than before. Āzhvār wishes to behold Bhagavān’s avatāra leelas but to no avail. He portrays himself as parAnkusa nAyaki, who was once with Bhagavān but now wallowing in despair having + Read more
ஆழ்வார் உலகத்தாருக்குச் செய்த உபதேசங்களெல்லாம், அவருக்குப் பகவானிடம் அன்பு மீதூர்ந்து செல்லக் காரணமாயின. பகவான் அன்று செய்த செயல்களை எல்லாம் நேரில் காண அவர் ஆசைப்பட்டார்; ஆனால் கிடைக்கவில்லை. எம்பெருமானோடு கலந்து பிரிந்த நாயகியின் நிலையை அடைந்து மோகித்துக் கிடக்கிறார் அவர். அந்நாயகியின் + Read more
Verses: 3134 to 3144
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will join the group of gods in the sky
  • TVM 4.2.1
    3134 ## பாலன் ஆய் * ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி *
    ஆல் இலை * அன்னவசம் செய்யும் அண்ணலார் **
    தாள் இணைமேல் அணி * தண் அம் துழாய் என்றே
    மாலுமால் * வல்வினையேன் * மட வல்லியே (1)
  • TVM 4.2.2
    3135 வல்லி சேர் நுண் இடை * ஆய்ச்சியர் தம்மொடும் *
    கொல்லைமை செய்து * குரவை பிணைந்தவர் **
    நல் அடிமேல் அணி * நாறு துழாய் என்றே
    சொல்லுமால் * சூழ் வினையாட்டியேன் * பாவையே (2)
  • TVM 4.2.3
    3136 பா இயல் வேத * நல் மாலை பல கொண்டு *
    தேவர்கள் மா முனிவர் * இறைஞ்ச நின்ற **
    சேவடிமேல் அணி * செம் பொன் துழாய் என்றே
    கூவுமால் * கோள் வினையாட்டியேன் கோதையே (3)
  • TVM 4.2.4
    3137 கோது இல வண் புகழ் * கொண்டு சமயிகள் *
    பேதங்கள் சொல்லிப் * பிதற்றும் பிரான் பரன் **
    பாதங்கள் மேல் அணி * பைம் பொன் துழாய் என்றே
    ஓதுமால் * ஊழ்வினையேன் * தடந் தோளியே (4)
  • TVM 4.2.5
    3138 தோளி சேர் பின்னை பொருட்டு * எருது ஏழ் தழீஇக்
    கோளியார் * கோவலனார் * குடக் கூத்தனார் **
    தாள் இணைமேல் அணி * தண் அம் துழாய் என்றே
    நாளும் நாள் * நைகின்றதால் * என் தன் மாதரே (5)
  • TVM 4.2.6
    3139 மாதர் மா மண் மடந்தை பொருட்டு * ஏனம் ஆய் *
    ஆதி அம் காலத்து * அகல் இடம் கீண்டவர் **
    பாதங்கள் மேல் அணி * பைம் பொன் துழாய் என்றே
    ஓதும் மால் * எய்தினள் * என் தன் மடந்தையே (6)
  • TVM 4.2.7
    3140 மடந்தையை * வண் கமலத் திருமாதினை *
    தடம் கொள் தார் மார்பினில் * வைத்தவர் தாளின்மேல் **
    வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே * இவள்
    மடங்குமால் * வாண்(ள்) நுதலீர்! * என் மடக்கொம்பே (7)
  • TVM 4.2.8
    3141 கொம்பு போல் சீதைபொருட்டு * இலங்கை நகர் *
    அம்பு எரி உய்த்தவர் * தாள் இணை மேல் அணி **
    வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே * இவள்
    நம்புமால் * நான் இதற்கு என் செய்கேன் * நங்கைமீர்? (8)
  • TVM 4.2.9
    3142 நங்கைமீர் நீரும் * ஓர் பெண் பெற்று நல்கினீர் *
    எங்ஙனே சொல்லுகேன் * யான் பெற்ற ஏழையை? **
    சங்கு என்னும் சக்கரம் என்னும் * துழாய் என்னும் *
    இங்ஙனே சொல்லும் * இராப் பகல் என்செய்கேன்? (9)
  • TVM 4.2.10
    3143 என் செய்கேன்? என்னுடைப் பேதை * என் கோமளம் *
    என் சொல்லும் * என் வசமும் அல்லள் நங்கைமீர் **
    மின் செய் பூண் மார்பினன் * கண்ணன் கழல் துழாய் *
    பொன் செய் பூண் * மென் முலைக்கு என்று மெலியுமே (10)
  • TVM 4.2.11
    3144 ## மெலியும் நோய் தீர்க்கும் * நம் கண்ணன் கழல்கள்மேல் *
    மலி புகழ் வண் குருகூர்ச் * சடகோபன் சொல் **
    ஒலி புகழ் ஆயிரத்து * இப் பத்தும் வல்லவர் *
    மலி புகழ் வானவர்க்கு ஆவர் * நல் கோவையே (11)