Your browser does not support the audio element.
audio
3123 ஒருநாயகமாய் ஓடவுலகுடனாண்டவர் *
கருநாய்கவர்ந்தகாலர் சிதைகியபானையர் *
பெருநாடுகாண இம்மையிலேபிச்சைதாம்கொள்வர் *
திருநாரணன்தாள் காலம்பெறச்சிந்தித்துய்ம்மினோ. (2)
3124 உய்ம்மின்திறைகொணர்ந்து என்றுலகாண்டவர் * இம்மையே
தம்மின்சுவைமடவாரைப் பிறர்கொள்ளத்தாம்விட்டு *
வெம்மினொளிவெயில் கானகம்போய்க்குமைதின்பர்கள் *
செம்மின்முடித்திருமாலை விரைந்தடிசேர்மினோ.
3125 அடிசேர்முடியினராகி அரசர்கள்தாம்தொழ *
இடிசேர்முரசங்கள் முற்றத்தியம்பவிருந்தவர் *
பொடிசேர்துகளாய்ப்போவர்கள் ஆதலில்நொக்கென *
கடிசேர்துழாய்முடிக் கண்ணன்கழல்கள்நினைமினோ.
3126 நினைப்பான்புகில் கடலெக்கலின்நுண்மணலின்பலர் *
எனைத்தோறுகங்களும் இவ்வுலகாண்டுகழிந்தவர் *
மனைப்பால்மருங்கற மாய்தலல்லால் மற்றுக்கண்டிலம் *
பனைத்தாள்மதகளிறட்டவன் பாதம்பணிமினோ.
3127 பணிமின்திருவருளென்னும் அம்சீதப்பைம்பூம்பள்ளி *
அணிமென்குழலார் இன்பக்கலவியமுதுண்டார் *
துணிமுன்புநாலப் பல்லேழையர்தாமிழிப்பச்செல்வர் *
மணிமின்னுமேனி நம்மாயவன்பேர்சொல்லிவாழ்மினோ.
3128 வாழ்ந்தார்கள்வாழ்ந்தது மாமழைமொக்குளின் மாய்ந்துமாய்ந்து *
ஆழ்ந்தாரென்றல்லால் அன்றுமுதலின்றறுதியா *
வாழ்ந்தார்கள்வாழ்ந்தேநிற்பர் என்பதில்லை நிற்குறில் *
ஆழ்ந்தார்கடற்பள்ளி அண்ணலடியவராமினோ.
3129 ஆமின்சுவையவைஆறோடு அடிசிலுண்டார்ந்தபின் *
தூமென்மொழிமடவாரிரக்கப் பின்னும்துற்றுவார் *
ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவராதலின் *
கோமின்துழாய்முடி ஆதியஞ்சோதிகுணங்களே.
3130 குணங்கொள்நிறைபுகழ்மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து *
இணங்கியுலகுடனாக்கிலும் ஆங்கவனையில்லார் *
மணங்கொண்டபோகத்துமன்னியும்மீள்வர்கள்மீள்வில்லை *
பணங்கொளரவணையான் திருநாமம்படிமினோ.
3131 படிமன்னுபல்கலன்பற்றோடறுத்து ஐம்புலன்வென்று *
செடிமன்னுகாயம்செற்றார்களும் ஆங்கவனையில்லார் *
குடிமன்னுமின்சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள்மீள்வில்லை *
கொடிமன்னுபுள்ளுடை அண்ணல்கழல்கள்குறுகுமினோ.
3132 குறுகமிகவுணர்வத்தொடுநோக்கி எல்லாம்விட்ட *
இறுகலிறப்பென்னும்ஞானிக்கும் அப்பயனில்லையேல் *
சிறுகநினைவதோர்பாசமுண்டாம் பின்னும்வீடில்லை *
மறுகலிலீசனைப்பற்றி விடாவிடில்வீடஃதே.
3133 அஃதேஉய்யப்புகுமாறென்று கண்ணன்கழல்கள்மேல் *
கொய்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்குற்றேவல் *
செய்கோலத்தாயிரம் சீர்த்தொடைப்பாடலிவைபத்தும் *
அஃகாமல்கற்பவர் ஆழ்துயர்போயுய்யற்பாலரே. (2)