Sing These Verses: There Will Be No More Births.
இவற்றைப் பாடுக: ஜன்மமே இராது
3111 ஏற்கும்பெரும்புகழ் வானவரீசன்கண்ணன்தனக்கு *
ஏற்கும்பெரும்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *
ஏற்கும்பெரும்புகழ் ஆயிரத்துள்இவையுமோர்பத்து *
ஏற்கும்பெரும்புகழ் சொல்லவல்லார்க்குஇல்லை சன்மமே. (2)