I Have Reached Tirumāl: My Weakness Has Gone.
திருமாலைச் சேர்ந்தேன்: தளர்ச்சி நீங்கியது
3120 துக்கமில்ஞானச்சுடரொளிமூர்த்தி துழாயலங்கல்பெருமான் *
மிக்கபன்மாயங்களால்விகிர்தஞ்செய்து வேண்டு முருவுகொண்டு *
நக்கபிரானோடயன்முதலாக எல்லாருமெவையும் * தன்னுள்
ஒக்கவொடுங்கவிழுங்கவல்லானைப்பெற்று ஒன்றும் தளர்விலனே.