I Have Joined Kaṇṇaṉ: Affliction Has Departed.
கண்ணனைச் சேர்ந்தேன்: அல்லல் அகன்றது
3118 துன்பமுமின்பமுமாகிய செய்வினையாய்உலகங்களுமாய் *
இன்பமில்வெந்நரகாகி இனியநல்வான்சுவர்க்கங்களுமாய் *
மன்பல்லுயிர்களுமாகிப் பலபலமாயமயக்குகளால் *
இன்புறுமிவ்விளையாட்டுடையானைப்பெற்று ஏதுமல்லலிலனே.