Chapter 4

A mothers prayers about a lamenting daughter - (ஆடி ஆடி)

தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்
This segment of divine hymns are based on the mother of parAnkusa nAyaki asking Bhagavān, “BhagavAnE! You remove all worries and sufferings of all creatures in existence! My daughter, who is deeply in love with you, is suffering in separation from you! What do you plan to do for her!”
பகவானே! தேவரீர் எப்போதும் எல்லோருடைய துன்பங்களையும் நீங்குவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறீர்! தங்கள்மீது கொண்ட பேரன்பின் காரணமாக என் பெண் அவதிப்படுகிறாளே! இவளுக்காக நீர் என்ன செய்ய நினைத்திருக்கிறீர்! என்று தாய் தன் பெண்ணாகிய பராங்குச நாயகியைப் பற்றி எம்பெருமானிடம் கேட்பதுபோல் அமைந்துள்ளது + Read more
Verses: 2934 to 2944
Grammar: Vaṉjiviruththam / வஞ்சிவிருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will join the feet of Him decorated with garlands
  • TVM 2.4.1
    2934 ## ஆடி ஆடி * அகம் கரைந்து * இசை
    பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி ** எங்கும்
    நாடி நாடி * நரசிங்கா என்று *
    வாடி வாடும் * இவ் வாள் நுதலே (1)
  • TVM 2.4.2
    2935 வாள் நுதல் * இம் மடவரல் * உம்மைக்
    காணும் ஆசையுள் * நைகின்றாள் ** விறல்
    வாணன் * ஆயிரம் தோள் துணித்தீர் * உம்மைக்
    காண * நீர் இரக்கம் இலீரே (2)
  • TVM 2.4.3
    2936 இரக்க மனத்தோடு * எரி அணை *
    அரக்கும் மெழுகும் * ஒக்கும் இவள் **
    இரக்கம் எழீர் * இதற்கு என் செய்கேன் *
    அரக்கன் இலங்கை * செற்றீருக்கே? (3)
  • TVM 2.4.4
    2937 இலங்கை செற்றவனே என்னும் * பின்னும்
    வலம் கொள் * புள் உயர்த்தாய் என்னும் ** உள்ளம்
    மலங்க * வெவ் உயிர்க்கும் * கண்ணீர் மிகக்
    கலங்கிக் * கைதொழும் நின்று இவளே (4)
  • TVM 2.4.5
    2938 இவள் இராப்பகல் * வாய்வெரீ * இ தன
    குவளை ஒண் * கண்ண நீர் கொண்டாள் ** வண்டு
    திவளும் * தண் அம் துழாய் கொடீர் * என
    தவள வண்ணர் * தகவுகளே? (5)
  • TVM 2.4.6
    2939 தகவு உடையவனே என்னும் * பின்னும்
    மிக விரும்பும் * பிரான் என்னும் ** எனது
    அக உயிர்க்கு * அமுதே என்னும் * உள்ளம்
    உக உருகி * நின்று உள் உளே (6)
  • TVM 2.4.7
    2940 உள் உள் ஆவி * உலர்ந்து உலர்ந்து * என
    வள்ளலே * கண்ணனே என்னும் ** பின்னும்
    வெள்ள நீர்க் * கிடந்தாய் என்னும் * என
    கள்வி தான் * பட்ட வஞ்சனையே (7)
  • TVM 2.4.8
    2941 வஞ்சனே என்னும் * கைதொழும் * தன
    நெஞ்சம் வேவ * நெடிது உயிர்க்கும் ** விறல்
    கஞ்சனை * வஞ்சனை செய்தீர் * உம்மைத்
    தஞ்சம் என்று * இவள் பட்டனவே (8)
  • TVM 2.4.9
    2942 பட்ட போது * எழு போது அறியாள் * விரை
    மட்டு அலர் * தண் துழாய் என்னும் ** சுடர்
    வட்ட வாய் * நுதி நேமியீர் * நுமது
    இட்டம் என்கொல் * இவ் ஏழைக்கே? (9)
  • TVM 2.4.10
    2943 ஏழை பேதை * இராப்பகல் * தன
    கேழ் இல் ஒண் * கண்ண நீர் கொண்டாள் ** கிளர்
    வாழ்வை வேவ இலங்கை செற்றீர் * இவள்
    மாழை நோக்கு ஒன்றும் * வாட்டேன்மினே (10)
  • TVM 2.4.11
    2944 ## வாட்டம் இல் புகழ் * வாமனனை * இசை
    கூட்டி * வண் சடகோபன் சொல் ** அமை
    பாட்டு * ஓர் ஆயிரத்து இப் பத்தால் * அடி
    சூட்டலாகும் * அம் தாமமே (11)