O Kaṇṇa! You May Have to Fight with Asuras: Do Not Go.
கண்ணா! நீ அசுரர்களுடன் போரிட நேரலாம்: போகாதே
3813 உகக்குநல்லவரொடுமுழிதந்து
உன்தன்திருவுள்ளமிடர்கெடுந்தோறும் * நாங்கள்
வியக்கவின்புறுதும்எம்பெண்மையாற்றோம்
எம்பெருமான்! பசுமேய்க்கப்போகேல் *
மிகப்பலவசுரர்கள்வேண்டுமுருவங்கொண்டு
நின்றுஉழிதருவர்கஞ்சனேவ *
அகப்படிலவரொடும்நின்னொடாங்கே
அவத்தங்கள்விளையும்என்சொற்கொளந்தோ!