O Kaṇṇa! We Cannot Bear Your Separation: Do Not Go to Graze the Cows.
கண்ணா! பிரிவாற்றோம்: நீ ஆநிரை மேய்க்கச் செல்லாதே
3805 வேய்மருதோளிணைமெலியுமாலோ!
மெலிவுமென்தனிமையும்யாதும்நோக்கா *
காமருகுயில்களும்கூவுமாலோ!
கணமயிலவைகலந்தாலுமாலோ! *
ஆமருவினநிரைமேய்க்கநீபோக்கு
ஒருபகலாயிரமூழியாலோ! *
தாமரைக்கண்கள்கொண் டீர்தியாலோ!
தகவிலைதகவிலையேநீகண்ணா! (2)