Your browser does not support the audio element.
audio
2868 ஓடும்புள்ளேரி *
சூடும்தண்துழாய் *
நீடுநின்றுஅவை *
ஆடும் அம்மானே. (2)
2869 அம்மானாய்ப்பின்னும் *
எம்மாண்புமானான் *
வெம்மாவாய்கீண்ட *
செம்மாகண்ணனே.
2870 கண்ணாவானென்றும் *
மண்ணோர்விண்ணோர்க்கு *
தண்ணார்வேங்கட *
விண்ணோர்வெற்பனே. (2)
2871 வெற்பையொன்றெடுத்து *
ஒற்கமின்றியே *
நிற்குமம்மான்சீர் *
கற்பன்வைகலே.
2872 வைகலும்வெண்ணெய் *
கைகலந்துண்டான் *
பொய்கலவாது * என்
மெய்கலந்தானே.
2873 கலந்தென்னாவி *
நலங்கொள்நாதன் *
புலங்கொள்மாணாய் *
நிலம்கொண்டானே.
2874 கொண்டானேழ்விடை *
உண்டானேழ்வையம் *
தண்தாமஞ்செய்து * என்
எண்தானானானே.
2875 ஆனானானாயன் *
மீனோடேனமும் *
தானானானென்னில் *
தானாயசங்கே.
2876 சங்குசக்கரம் *
அங்கையில்கொண்டான் *
எங்கும்தானாய *
நங்கள்நாதனே.
2877 நாதன்ஞாலங்கொள் *
பாதன்என்னம்மான் *
ஓதம்போல்கிளர் *
வேதநீரனே.
2878 நீர்புரைவண்ணன் *
சீர்ச்சடகோபன் *
நேர்தலாயிரத்து *
ஓர்தலிவையே. (2)