The Lord is the True Form of the Trimūrtis
பகவான் மும்மூர்த்தி ஸ்வரூபன்
2821 வலத்தனன்திரிபுரமெரித்தவன் இடம்பெறத்துந்தித்
தலத்து * எழுதிசைமுகன்படைத்த நல்லுலகமும்தானும்
புலப்பட * பின்னும்தன்னுலகத்தில் அகத்தனன்தானே
சொலப்புகில் * இவைபின்னும்வயிற்றுள இவைஅவன்துயக்கே.