Your browser does not support the audio element.
audio
917 கதிரவன்குணதிசைக் சிகரம்வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய் *
மதுவிரிந்தொழுகினமாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி *
எதிர்திசைநிறைந்தனரிவரொடும்புகுந்த
இருங்களிற்றீட்டமும்பிடியொடுமுரசும் *
அதிர்தலிலலைகடல்போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (2)
918 கொழுங்கொடிமுல்லையின்கொழுமலரணவிக்
கூர்ந்ததுகுணதிசைமாருதமிதுவோ *
எழுந்தனமலரணைப் பள்ளிகொள்ளன்னம்
ஈன்பனிநனைந்ததமிருஞ்சிறகுதறி
விழுங்கியமுதலையின்பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயிறுறவதன்விடத்தனுக்கனுங்கி *
அழுங்கியவானையினருந்துயர்கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.
919 சுடரொளிபரந்தனசூழ்திசையெல்லாம்
துன்னியதாரகைமின்னொளிசுருங்கி *
படரொளிபசுத்தனன்பனிமதியிவனோ
பாயிருளகன்றது, பைம்பொழில்கமுகின் *
மடலிடைக்கீறிவண்பாளைகள்நாற
வைகறைகூர்ந்ததுமாருதமிதுவோ *
அடலொளிதிகழ்தருதிகிரியந்தடக்கை
920 மேட்டிளமேதிகள்தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும்விடைமணிக்குரலும் *
ஈட்டியவிசைதிசைபரந்தனவயலுள்
இரிந்தினசுரும்பினம், இலங்கையர்குலத்தை *
வாட்டியவரிசிலைவானவரேறே!
மாமுனிவேள்வியைக்காத்து * அவபிரதம்
ஆட்டியவடுதிறல்அயோத்தியெம்மரசே!
921 புலம்பினபுட்களும்பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல்புகுந்ததுபுலரி *
கலந்ததுகுணதிசைகனைகடலரவம்
களிவண்டுமிழற்றியகலம்பகம்புனைந்த *
அலங்கலந்தொடையல்கொண்டடியிணைபணிவான்
அமரர்கள் புகுந்தனராதலிலம்மா! *
இலங்கையர்கோன்வழிபாடுசெய்கோயில்
எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.
922 இரவியர்மணிநெடுந்தேரொடுமிவரோ!
இறையவர்பதினொருவிடையருமிவரோ *
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும்வசுக்களும்வந்துவந்தீண்டி *
புரவியோடாடலும்பாடலும் தேரும்
குமரதண்டம்புகுந்தீண்டியவெள்ளம் *
அருவரையனையநின்கோயில்முன்னிவரோ
923 அந்தரத்தமரர்கள்கூட்டங்களிவையோ
அருந்தவமுனிவரும்மருதருமிவரோ *
இந்திரனானையும்தானும்வந்திவனோ
எம்பெருமானுன்கோயிலின்வாசல் *
சுந்தரர்நெருக்கவிச்சாதரர்நூக்க
இயக்கரும்மயங்கினர்திருவடிதொழுவான் *
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
924 வம்பவிழ்வானவர்வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண்கண்ணாடிமுதலா *
எம்பெருமான் படிமக்கலம்காண்டற்கு
ஏற்பனவாயினகொண்டுநன்முனிவர் *
தும்புருநாரதர்புகுந்தனரிவரோ
தோன்றினனிரவியும்துலங்கொளிபரப்பி *
அம்பரதலத்தில்நின்றகல்கின்றதிருள்போய்
925 ஏதமில்தண்ணுமையெக்கம்மத்தளி
யாழ்குழல்முழவமோடிசைதிசைகெழுமி *
கீதங்கள்பாடினர்கின்னரர்கெருடர்கள்
கந்தருவரவர்கங்குலுளெல்லாம் *
மாதவர்வானவர்சாரணரியக்கர்
சித்தரும்மயங்கினர்திருவடிதொழுவான் *
ஆதலிலவர்க்குநாளோலக்கமருள
926 கடிமலர்க்கமலங்கள்மலர்ந்தனவிவையோ
கதிரவன்கனைகடல்முளைத்தனன்னிவனோ *
துடியிடையார்சுரிகுழல்பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர்சூழ்புனலரங்கா! *
தொடையொத்ததுளவமும்கூடையும்பொலிந்து
தோன்றியதோள்தொண்டரடிப்பொடியென்னு
மடியனை * அளியனென்றருளியுன்னடியார்க்
காட்படுத்தாய்! பள்ளிஎழுந்தருளாயே. (2)