Your browser does not support the audio element.
audio
927 அமலனாதிபிரான் அடியார்க்கென்னையாட்படுத்த
விமலன் * விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன்நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான் * திருக்
கமலபாதம்வந்து என்கண்ணினுள்ளனவொக்கின்றதே. (2)
928 உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற *
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரை *
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான் * அரைச்
சிவந்தஆடையின்மேல் சென்றதாமென்சிந்தனையே.
929 மந்திபாய் வடவேங்கடமாமலை * வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் *
அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே. (2)
930 சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன்தலைபத்து
உதிரவோட்டி * ஓர்வெங்கணையுய்த்தவன் ஒதவண்ணன் *
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான் * திருவயிற்று
உதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.
931 பாரமாய பழவினைபற்றறுத்து * என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள் புகுந்தான் *
கோரமாதவம்செய்தனன்கொல்லறியேன் * அரங்கத்தம்மான் * திரு
வாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.
932 துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன் * அஞ்சிறைய
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயஅப்பன் *
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை * முற்றும்
உண்டகண்டங்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.
933 கையினார் சுரிசங்கனலாழியர் * நீள்வரைபோல்
மெய்யனார் துளபவிரையார் கமழ்நீள்முடியெம்
ஐயனார் * அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார் *
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.
934 பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட * அமரர்க்கு
அரியஆதிப்பிரான் அரங்கத்தமலன்முகத்து *
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி * நீண்டஅப்
பெரியவாயகண்கள் என்னைப்பேதைமைசெய்தனவே.
935 ஆலமாமரத்தினிலைமேல் ஒருபாலகனாய் *
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான் *
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில் *
நீலமேனி ஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே. (2)
936 கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெ
யுண்டவாயன் * என்னுள்ளம்கவர்ந்தானை *
அண்டர்கோன்அணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள் * மற்றொன்றினைக் காணாவே. (2)