Chapter 2

Āndāl waking the Lord's Associates and The Lord Himself - (நாயகனாய் நின்ற)

ஆண்டாள் உறவினர்கள் மற்றும் பெருமாளை எழுப்புதல்
Āndāl waking the Lord's Associates and The Lord Himself - (நாயகனாய் நின்ற)

This chapter details the critical stage of intercession, known as Puruṣakāram. Having gathered the assembly of devotees, Andal and her friends reach the Lord's residence. They first seek permission from the Gatekeepers (Pasuram 16), who symbolize the initial access granted by the Acharya. They then wake the Lord's parents, Nanda-Gopa and Yashoda (Pasuram

+ Read more

இது ஆன்ம விடுதலைக்கான பாதையில் மிக முக்கியமான கட்டமாகும். இறைவனிடம் நேராகச் சென்று சரணடைவது, நம்முடைய பல குற்றங்களால் (அபராதங்களால்) கடினம். அதனால், இறைவனின் அருகில் இருப்பவர்கள் மூலம் அவருடைய கருணையைப் பெற வேண்டும். அந்தத் துணைதான் புருஷகாரம் என்று சம்ப்ரதாயத்தில் கூறப்படுகிறது.

+ Read more
Verses: 16 to 23
Grammar: Eṭṭadi Nārsīrovi Karppaka Kocchakakkalippā / எட்டடி நார்சீரொவி கற்பக கொச்சகக் கலிப்பா
Recital benefits: Will receive the grace of the Lord and live happy
  • TP 2.16
    489 ## நாயகனாய் நின்ற * நந்தகோபனுடைய
    கோயில் காப்பானே ! * கொடித் தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! * மணிக்கதவம் தாள் திறவாய் *
    ஆயர் சிறுமியரோமுக்கு ** அறை பறை
    மாயன் மணிவண்ணன் * நென்னலே வாய்நேர்ந்தான் *
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் *
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா ! *
    நீ நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் (16)
  • TP 2.17
    490 அம்பரமே தண்ணீரே * சோறே அறம் செய்யும் *
    எம்பெருமான் ! நந்தகோபாலா ! எழுந்திராய் *
    கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குல விளக்கே ! *
    எம்பெருமாட்டி ! யசோதாய் ! அறிவுறாய் **
    அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த *
    உம்பர் கோமானே ! உறங்காது எழுந்திராய் *
    செம்பொன் கழலடிச் செல்வா! பலதேவா! *
    உம்பியும் நீயும் உறங்கு ஏலோர் எம்பாவாய் (17)
  • TP 2.18
    491 ## உந்து மத களிற்றன் * ஓடாத தோள் வலியன் *
    நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய் ! *
    கந்தம் கமழும் குழலீ ! கடை திறவாய் *
    வந்து எங்கும் கோழி அழைத்தன காண் ** மாதவிப்
    பந்தர்மேல் * பல்கால் குயில் இனங்கள் கூவின காண் *
    பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர் பாடச் *
    செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப *
    வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (18)
  • TP 2.19
    492 குத்து விளக்கு எரியக் * கோட்டுக்கால் கட்டில் மேல் *
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி *
    கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் *
    வைத்துக் கிடந்த மலர் மார்பா ! வாய்திறவாய் **
    மைத் தடங்கண்ணினாய் * நீ உன் மணாளனை *
    எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் *
    எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால் *
    தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் (19)
  • TP 2.20
    493 முப்பத்து மூவர் * அமரர்க்கு முன் சென்று *
    கப்பம் தவிர்க்கும் கலியே ! துயில் எழாய் *
    செப்பம் உடையாய்! திறல் உடையாய் ! * செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா ! துயில் எழாய் **
    செப்பு அன்ன மென் முலைச் * செவ்வாய்ச் சிறு மருங்குல் *
    நப்பின்னை நங்காய் ! திருவே ! துயில் எழாய் *
    உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை *
    இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் (20)
  • TP 2.21
    494 ஏற்ற கலங்கள் * எதிர் பொங்கி மீது அளிப்ப *
    மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் *
    ஆற்றப் படைத்தான் மகனே ! அறிவுறாய் *
    ஊற்றம் உடையாய் ! பெரியாய் ! ** உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் *
    மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் *
    ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே *
    போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் (21)
  • TP 2.22
    495 அங்கண் மா ஞாலத்து அரசர் * அபிமான
    பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே *
    சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் *
    கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே **
    செங்கண் சிறுச் சிறிதே * எம்மேல் விழியாவோ? *
    திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் *
    அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் *
    எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் (22)
  • TP 2.23
    496 ## மாரி மலை முழைஞ்சில் * மன்னிக் கிடந்து உறங்கும் *
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து *
    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி *
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு **
    போதருமா போலே * நீ பூவைப்பூ வண்ணா ! * உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி * கோப்பு உடைய
    சீரிய சிங்காசனத்து இருந்து * யாம் வந்த
    காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் (23)