O Friend! The city of Him Who captivated me is Tiruvaraṅgam.
தோழீ! என்னைக் கவர்ந்தவர் ஊர் திருவரங்கம்
2076 மின்னிலங்குதிருவுருவும்பெரியதோளும்
கரிமுனிந்தகைத்தலமும்கண்ணும்வாயும் *
தன்னலர்ந்தநறுந்துழாய்மலரின்கீழே
தாழ்ந்திலங்கும்மகரம்சேர்குழையும் காட்டி *
என்னலனும்என்நிறைவும்என்சிந்தையும்
என்வளையும்கொண்டு என்னையாளும்கொண்டு *
பொன்னலர்ந்தநறுஞ்செருந்திப்பொழிலினூடே
புனலரங்கமூரென்றுபோயினாரே.