தனியன் / Taniyan

திருவெழுகூற்றிருக்கை தனியன்கள் / Thiruvezukuṛṛirukkai taṉiyaṉkal̤

வாழி பரகாலன் வாழி கலி கன்றி *

வாழி குறையலூர் வாழ் வேந்தன் * - வாழியரோ

மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள்

மங்கையர் கோன் * தூயோன் சுடர்மான வேல்

vāzi parakālan vāzi kaliganṟi⋆

vāzi kuṟaiyalūr vāzvēndan ⋆ vāziyarō

māyōnai vāḻvaliyāl mandiraṅgoḻ⋆

maṅgaiyar kōn tūyōn śuḍarmāna vēl !

எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

பரகாலன் புற மதத்தினருக்கு யமன் போன்ற; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; கலிகன்றி கலியைக் கெடுத்த; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; குறையலூர் வாழி குறையலூர் வாழும்படி; வாழ்வேந்தன் அதன் அரசனான; வாழியரோ திருமங்கை ஆழ்வார் வாழ்க; மாயோனை எம்பெருமானிடத்திலிருந்து; வாள்வலியால் தமது வாளின் வலிமையால்; மந்திரங்கொள் திருமந்திரத்தைப் பெற்றவரும்; தூயோன் அகப்புறத் தூய்மை உடையவருமான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வாரின்; சுடர்மான ஒளிமயமான பெருமையை உடைய; வேல்! வாழி வேல் வாழ்க

திருவெழுகூற்றிருக்கை தனியன்கள் / Thiruvezukuṛṛirukkai taṉiyaṉkal̤

சீரார் திருவெழுகூற்றிருக்கை யென்னுஞ் செந்தமிழால் *

ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனடியிணைக்கீழ் *

ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ்வுல குய்யவே *

சேராமற் சொன்ன அருண் மாரி பாதம் துணை நமக்கே

cīrār tiruvĕḻukūṟṟirukkai yĕṉṉuñ cĕntamiḻāl *

ārāvamutaṉ kuṭantaip pirāṉ taṉaṭiyiṇaikkīḻ *

erār maṟaip pŏrul̤ĕllā mĕṭuttivvula kuyyave *

cerāmaṟ cŏṉṉa aruṇ māri pātam tuṇai namakke

எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

சீரார் சிறந்த; திருவெழு கூற்றிருக்கை திருவெழு கூற்றிருக்கை; என்னும் என்னும்; செந்தமிழால் செந்தமிழ் நூலால்; ஆராவமுதன் ஆராவமுதன் என்னும்; குடந்தைப் பிரான் திருக்குடந்தைப் பெருமானுடைய; தன் அடியிணைக்கீழ் திருவடிகளைப் பற்றி; ஏரார் மறை வேதப் பொருள்களுடன்; பொருளெல்லாம்எல்லாம் பல அர்த்தங்களை; எடுத்து விளங்க வைத்து; இவ்வுலகு இவ்வுலகம்; உய்யவே உய்வு பெற; அருள்மாரி அருள் மழைபோன்ற உபதேசங்களை; சோராமற் சொன்ன ஒன்றுவிடாமல் கூறிய; பாதம் திருமங்கை ஆழ்வாருடைய திருவடிகளே; துணை நமக்கே நமக்குத் துணை ஆகும்