ஊராய வெல்லாம் ஒழியாமே – ஓர் இடத்தே யிருந்து இரண்டு ஒரு கால் சொல்லி விடுகிறோனோ – சொல்லிச் சொல்லாத ஊர் எல்லாம் புகக் கடவேன் – வேனுமாகில் என் பின்னே வந்து பட்டோலை எழுதிக் கொள்ளுங்கோள்-
நான் – அவன் புக்கவிடம் புக்கு அவனை அளிக்கக் கடவ நான்
அவனை – என்னையும் இப்பாடு படுத்தி அர்ச்சக பராதீனன் என்று காஹளம் பிடித்து இருக்கிறவனை –
இனி அறும் இடத்தை எல்லாம் சொல்லி