ஆரானும் ஆதானும் அல்லள் சைதன்யம் குறைந்தவளும் அல்லள் அசித் கல்பையும் அல்லள் –
அவள் காணீர் – அவளைக் கேளுங்கோள்
வாரார் வனமுலை தன்னால் தரித்துத் தாங்க ஒண்ணாத முலை என்று பருவம் மிக்கு இருக்கிறபடி சொல்லுகிறது – காந்தன் தாங்குதல் அது பெறாத போது-வாராலே தரித்தல் -செய்யும் இத்தனை –
வாசவத்தை என்று ஆரானும் சொல்லப் படுவாள் – பிரசித்தை அன்றோ – விலஷணர் எல்லாம்