STM 33

கற்பில் சிறந்த வாசவதத்தை வத்ஸராஜன் பின்னால் சென்று விடவில்லையா?

2705 பேராயமெல்லாம் ஒழியப் பெருந்தெருவே *
தாரார்தடந்தோள் தளைக்காலன்பின்போனாள் *
ஊராரிகழ்ந்திடப்பட்டாளே? * - மற்றெனக்கிங்கு
ஆரானும்கற்பிப்பார்நாயகரே? * நானவனைக்
2705 per āyam ĕllām ŏzhiyap pĕrun tĕruve *
tār ār taṭantol̤ tal̤aik kālaṉ piṉ poṉāl̤ *
ūrār ikazhntiṭappaṭṭāl̤e? * maṟṟu ĕṉakku iṅku
ārāṉum kaṟpippār nāyakare? * nāṉ avaṉaik -33

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2705. Once she left all her friends and went along the wide street behind her broad-armed garlanded beloved. The villagers gossiped saying mean things about her. Here is what I am going to do. 33

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் ஆயம் சிறந்த தோழிகளை; எல்லாம் ஒழிய எல்லாம் விட்டிட்டு; பெருந் தெருவே பெரிய வீதி வழியே; தார் ஆர் மாலை அணிந்த; தடந் தோள் பெரிய தோள்களையுடைய; தளை விலங்கிடப்பெற்ற; காலன் கால்களை உடையவனுமான; பின் போனாள் வத்ஸராஜன் பின் போனாள்; ஊரார் அவள் ஊராராலே; இகழ்ந்திடப்பட்டாளே? நிந்திக்கப்பட்டாளோ? இல்லையே; எனக்கு இங்கு இப்படிப்பட்ட என் நிலையில்; மற்று கற்பிப்பார் என் துணிவுக்கு உபதேசிப்பவர்கள்; ஆரானும் யாராக இருந்தாலும்; நாயகரே அவர்கள் பேச்சை நான் கேட்கமாட்டேன்; நான் அவனை நான் அவனுடைய
than pĕr āyam ellām ozhiya leaving aside all her friends; perum theruvĕ in a huge street; thār ār thada thŏl̤ thalai kālan pin pŏnāl̤ she went behind vathsarājan [her beloved] who has huge shoulders with garland decorating them, and who had his legs chained; ūrār igazhndhitappattāl̤ĕ Was she spoken ill of, by the people? (no); ingu in my present state; enakku for me (who has this determination); maṝum kaṛpippār those who counselled patience which is opposite of my determination; ārānum whoever it may be; nāyagarĕ can their words be binding on me? (ī will not listen to them)