STM 23

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2695 - திருதுழாய்த்
தாரார்ந்தமார்வன் தடமால்வரைபோலும் *
போரானைபொய்கைவாய்க் கோட்பட்டுநின்றலறி *
நீரார்மலர்க்கமலம்கொண்டு ஓர்நெடுங்கையால் *
நாராயணா! ஓ! மணிவண்ணா! நாகணையாய்! *
வாராய்என்னாரிடரைநீக்காய் * - எனவெகுண்டு
தீராதசீற்றத்தால் சென்றிரண்டுகூறாக *
ஈராவதனையிடர்கடிந்தான் எம்பெருமான் *
பேராயிரமுடையான் பேய்ப்பெண்டீர்! நும்மகளை *
தீராநோய்செய்தான் எனவுரைத்தாள் * - சிக்கெனமற்று
2695 tirut tuzhāyt
tār ārnta mārvaṉ taṭa māl varai polum *
por āṉai pŏykaivāyk koṭpaṭṭu niṉṟu alaṟi *
nīr ār malark kamalam kŏṇṭu or nĕṭuṅ kaiyāl *
nārāyaṇā o maṇivaṇṇā nākaṇaiyāy *
vārāy ĕṉ ār iṭarai nīkkāy * ĕṉa vĕkuṇṭu
tīrāta cīṟṟattāl cĕṉṟu iraṇṭu kūṟu āka *
īrā ataṉai iṭar kaṭintāṉ ĕm pĕrumāṉ *
per āyiram uṭaiyāṉ peyp pĕṇṭīr num makal̤ai *
tīrā noy cĕytāṉ ĕṉa uraittāl̤ * cikkĕṉa maṟṟu-23

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2695. “‘The elephant Gajendra, large as a dark mountain, who would go to a pond every day to get a lotus flower to worship the god, was caught by a crocodile one day. He raised his long trunk screamed out calling the god, “Nārāyanā, you with the color of a diamond who rest on Adisesha, come, remove my terrible distress. ‘Our lord came to Gajendra and, enraged at the crocodile, cut it in two pieces with his discus and saved Gajendra. It is the thousand-named lord who has given this love sickness to your daughter, making her crazy about him. ’” swiftly told the fortune teller. 23

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருத்துழாய் துளசி; தார் ஆர்ந்த மாலை அணிந்த; மார்வன் மார்பையுடைய பெருமான்; தட மால் வரை போலும் மலை போன்ற கஜேந்திரன்; ஓர் நெடுங்கையால் தன் நீண்ட துதிக்கையால்; நீர் ஆர் மலர் அப்போது அலர்ந்த; கமலம் கொண்டு தாமரைப்பூவை எடுக்க; பொய்கை பொய்கையில்; போர் ஆனை முதலையின்; வாய்க் கோட்பட்டு வாயிலகப்பட்டு; நின்று அலறி வருந்தி கதறும்; நாராயணா! நாராயணா!; ஓ! மணிவண்ணா! ஓ! மணிவண்ணா!; நாகணையாய்! ஆதிசேஷனில் சயனித்திருப்பவனே!; வாராய்! என் வாராய் வந்து என்; ஆர் இடரை நீக்காய் பெரும் இடரை நீக்கியருளவேண்டும்; என வெகுண்டு என்றதும் முதலையிடம் கோபங்கொண்டு; தீராத சீற்றத்தால் தீராத அந்த கோபத்தால்; சென்று அங்கு சென்று; இரண்டு கூறு ஆக முதலயை இருதுண்டமாக; ஈரா பிளந்து; அதனை இடர் கஜேந்திரனின் துயரை; கடிந்தான் போக்கினான்; எம் பெருமான் எம்பெருமான்; பேய்ப் பெண்டீர்! அறிவு கெட்ட பெண்களே!; பேர் ஆயிரம் ஸஹஸ்ர நாமங்களை; உடையான் உடைய பெருமான் தான்; நும் மகளை உங்கள் மகளுக்கு; தீரா நோய் இப்படிப்பட்ட தீராத நோயை; செய்தான் உண்டு பண்ணினான்; என உரைத்தாள் என்று கூறி; சிக்கென முடித்தாள் கட்டுவிச்சி
thadam māl varai pŏlum pŏr ānai an elephant in exultation, which was like a huge mountain; poygai vāy kŏl̤ pattu ninṛu alaṛi feeling distressed after being caught in water, in the mouth of a crocodile; ŏr nedu kaiyāl nīr ār kamalam malar koṇdu with a long trunk, taking lotus flowers which had just then blossomed; ŏ nārāyaṇā! maṇivaṇṇā! nāgaṇaiyāy! “ŏh nārāyaṇa! ŏh one with blue gemstone like complex! ŏh one who is lying on the serpent-bed!; vārāy en ār idarai nīkkāy ena you should come; you should mercifully remove my great sorrow” crying out loudly, like this; thiru thuzhāy thār ārndha mārvan ḍonning a garland of thiruththuzhāy (thul̤asi) on his chest, the l̤ord; veguṇdu getting furious (on the crocodile); thīrādha sīṝaththāl senṛu going (to the bank of that pond) with uncontrolled fury; iraṇdu kūṛāga as two pieces; īrā split (that crocodile); adhanai idar kadindhān emperumān emperumān who removed the sorrow of gajĕndhran; pĕr āyiram udaiyān one who has a thousand names (which reflect such innumerable activities); pĕy peṇdīr ŏh womenfolk, who have lost your sense of knowledge; thīrā nŏy seydhān ena uraiththāl̤ Chikkena (the fortune teller) ended her narration saying that only he caused such incurable disease.