அம் மூன்றும் ஆராயில் தானே – இவற்றை ஆராயப் புகில் – தம்முடைய திரு உள்ளத்தில் கிடக்கிற காமமே புருஷார்த்தம் -என்றாதல்
அறம் பொருள் இன்பம் என்று – கீழே புருஷார்த்தத்தை மூன்று என்று சொல்லச் செய்தே இங்கு எடுத்ததுக்கு பிரயோஜனம் என் என்னில் மோஷம் இதின் உள்ளே ஓன்று என்று சொல்லுவார் உண்டாகிலும் என்று அவர்களுக்கு இடமறச் சொல்லுகிறாள் –
ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் – நடுவனது