இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்

சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல்,

உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது, ஓங்கும் அன்பால்

இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

nayandaru pērinbam ellām pazudinṟi naṇṇinarpāl⋆

śayandaru kīrtti irāmānuśa muni tāḻ iṇaimēl ⋆

uyarnda kuṇattu ttiruvaraṅga ttamudōṅgum anbāl

iyambum⋆ kalittuṟai andādi ōda iśai neñjamē !

வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar

Word by word meaning

நெஞ்சமே! ஓ மனமே!; நயம் தரு விஷயங்களால் உண்டாகும்; பேரின்பம் எல்லாம் சிற்றின்பங்கள் யாவும்; பழுது என்று வீணானது என்று அவைகளை ஒழித்து; நண்ணினர்பால் பெருமானைப் பணிந்தவர்களுக்கு; சயம் தரு கீர்த்தி வெற்றி என்னும் மோக்ஷம் உண்டாக்கும்; இராமாநுசமுனி இராமானுஜருடைய; தாள் இணைமேல் திருவடிகளைக்குறித்து; உயர்ந்த குணத்து சிறந்த குணசாலியான; ஓங்கும் அன்பால் தம் சிறந்த பக்தியால்; இயம்பும் அருளிச்செய்த; கலித்துறை கட்டளைக் கலித்துறையால் ஆன; திருவரங்கத்து அமுது திருவரங்கத்தமுதனார்