முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்
munnai vinai agala mūṅgiṟ kuḍi amudan ⋆
ponnam kazaṟkamala pōdiraṇḍum ⋆ ennuḍaiya
śennikkaṇi āga ccērttinēn ⋆ tenbulattār -
kennu kaḍavuḍaiyēn yān