The One Who Inspired Me to Do Service is Rāmāṉuja
அடிமை செய்ய என்னைத் தூண்டியவன் இராமானுசன்
3989 தன்னையுற்றாட்செய்யும்தன்மையினோர் * மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட்செய்ய என்னையுற்றானின்று * தன்தகவால்
தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லையென்றறிந்து
தன்னையுற்றாரை * இராமானுசன்குணம்சாற்றிடுமே.