O Mind! You Have Made Me a Servant to the Servants of Rāmāṉuja! I Worship You.
மனமே! என்னை இராமானுசன் அடியார்க்கு அடியவனாக்கினாயே! உன்னை வணங்கினேன்
3895 பேரியல்நெஞ்சே! அடிபணிந்தேனுன்னை * பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம்புலர்த்தி * பொருவருஞ்சீர்
ஆரியன்செம்மை இராமானுசமுனிக்கன்புசெய்யும்
சீரியபேறுடையார் * அடிக்கீழ்என்னைச்சேர்த்ததற்கே.