RNA 21

Rāmāṉuja, Who Worships the Holy Feet of Āḷavantār, is the One Who Protected Me

ஆளவந்தார் திருவடிகளை வணங்கும் இராமானுசனே என்னைக் காத்தான்

3913 நிதியைப்பொழியும் முகிலென்று * நீசர்தம்வாசல்பற்றித்

துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் இனி * தூய்நெறிசேர்

எதிகட்கிறைவன்யமுனைத்துறைவனிணையடியாம்

கதிபெற்றுடைய * இராமானுசன்என்னைக்காத்தனனே.

Text size