Rāmāṉuja is He Who Lives by the Divine Grace of Āṇṭāḷ
ஆண்டாள் திருவருளால் வாழ்பவன் இராமானுசன்
3908 ## தாழ்வொன்றில்லாமறைதாழ்ந்து * தலமுழுதும்கலியே
ஆள்கின்றநாள்வந்து அளித்தவன்காண்மின் * அரங்கர்மௌலி
சூழ்கின்றமாலையைச்சூடிக்கொடுத்தவள்தொல்லருளால்
வாழ்கின்றவள்ளல் * இராமானுசனென்னும்மாமுனியே. (2)