Your browser does not support the audio element.
audio
2739 போர்வேந்தன்
தன்னுடையதாதை பணியாலரசொழிந்து *
பொன்னகரம் பின்னேபுலம்ப வலங்கொண்டு *
மன்னும்வளநாடு கைவிட்டு * - மாதிரங்கள்
2740 மின்னுருவில் விண்தேர் திரிந்துவெளிப்பட்டு *
கல்நிறைந்துதீய்ந்து கழையுடைந்து கால்சுழன்று *
பின்னுந்திரைவயிற்றுப் பேயேதிரிந்துலவா *
கொன்னவிலும் வெங்கானத்தூடு * -
2741 கொடுங்கதிரோன்
துன்னுவெயில்வறுத்த வெம்பரல்மேல் பஞ்சடியால் *
மன்னனிராமன்பின் வைதேவிஎன்றுரைக்கும் *
அன்னநடைய அணங்குநடந்திலளே? *