Your browser does not support the audio element.
audio
2742 பின்னும்கருநெடுங்கண் செவ்வாய்பிணைநோக்கின் *
மின்னனையநுண்மருங்குல் வேகவதியென்றுரைக்கும்
கன்னி * தன் இன்னுயிராம் காதலனைக்காணது *
தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று * அங்கு
அன்னவனை நோக்காது அழித்துரப்பி * -
2743 வாளமருள் கல்நவில்தோள்காளையைக் கைப்பிடித்துமீண்டும்போய் *
பொன்னவிலுமாகம் புணர்ந்திலளே? *