Your browser does not support the audio element.
audio
2726 இருவிசும்பில் மன்னுமழைதவழும் வாணிலாநீண்மதிதோய் *
மின்னினொளிசேர் விசும்பூரும்மாளிகைமேல் *
மன்னுமணி விளக்கைமாட்டி * மழைக்கண்ணார் -
2727 பன்னுவிசித்திரமாப் பாப்படுத்தபள்ளிமேல் *
துன்னியசாலேகம் சூழ்கதவம்தாள் திறப்ப *
அன்னமுழக்க நெரிந்துக்கவாள்நீலச் * சின்னநறுந்தாது சூடி * ஓர்மந்தாரம் -
2728 துன்னுநறுமலரால் தோள்கொட்டி * கற்பகத்தின்
மன்னுமலர்வாய் மணிவண்டுபின்தொடர *
இன்னிளம்பூந்தென்றல் புகுந்தீங்கிளமுலைமேல் *
நன்னறுஞ்சந்தனச்சேறு உலர்த்த * தாங்கருஞ்சீர்-
2729 மின்னிடைமேல் கைவைத்திருந்து ஏந்திளமுலைமேல் *
பொன்னரும்பாரம்புலம்ப * - அகங்குழைந்தாங்கு
2730 இன்னவுருவின் இமையாத்தடங்கண்ணார் *
அன்னவர்தம்மானோக்கமுண்டு ஆங்கணிமுறுவல் *
இன்னமுதம் மாந்தியிருப்பர் * - இதுவன்றே
2731 அன்னவறத்தின் பயனாவது * ஒண்பொருளும்
அன்னதிறத்ததே யாதலால் * - காமத்தின்
மன்னும்வழிமுறையே நிற்றும்நாம் *
2732 மானோக்கின்
அன்னநடையாரலரேச ஆடவர்மேல் *
மன்னுமடலூரா ரென்பதோர்வாசகமும் *
தென்னுரையில் கேட்டறிவதுண்டு * - அதனையாம் தெளியோம்
மன்னும் வடநெறியே வேண்டினோம் * -
2733 வேண்டாதார்
தென்னன்பொதியில் செழுஞ்சந்தனக்குழம்பின் *
அன்னதோர் தன்மையறியாதார் * -
2734 ஆயன்வேய்
இன்னிசை யோசைக்கு இரங்காதார் * மால்விடையின்
மன்னுமணி புலம்பவாடாதார் * -
2735 பெண்ணைமேல்
பின்னும் அவ்வன்றிற்பேடைவாய்ச் சிறுகுரலுக்கு *
உன்னியுடலுருகிநையாதார் * -
2736 உம்பவர்வாய்த்
துன்னிமதியுகுத்த தூநிலா நீள்நெருப்பில் *
தம்முடலம்வேவத் தளராதார் * -
2737 காமவேள்
மன்னுஞ்சிலைவாய் மலர்வாளிகோத்தெய்ய *
பொன்நெடுவீதிபுகாதார் * -
2738 தம்பூவணைமேல்
சின்னமலர்க்குழலும் அல்குலும்மென்முலையும் *
இன்னிளவாடைதடவத் தாம்கண்துயிலும் *
பொன்னனையார் பின்னுந்திருவுறுக * -