PT 9.2.1

அச்சோ! இவர் எவ்வளவு அழகு!

1758 பொன்னிவர்மேனிமரகதத்தின்
பொங்கிளஞ்சோதியகலத்துஆரம்
மின் * இவர்வாயில்நல்வேதமோதும்
வேதியர்வானவராவர்தோழீ! *
என்னையும்நோக்கிஎன்னல்குலும்நோக்கி
ஏந்திளங்கொங்கையும்நோக்குகின்றார் *
அன்னையென்னோக்குமென்றஞ்சுகின்றேன்
அச்சோஒருவரழகியவா! (2)
1758
poNnNnivar mENni maraga thaththiNn *
poNGgu iLaNY chOdhi agalaththu ārammiNn, *
ivar vāyil nNal vEdham Odhum *
vEdhiyar vāNnavar āvar thOzhI, *
eNnNnaiyum nNOkki eNnNn alkulum nNOkki *
EnNdhiLaNG goNGgaiyum nNOkkugiNnRār, *
aNnNnai eNn nOkkum eNnRu anchukiNnRENn *
achchO oruvar azhagiyavā! (2) 9.2.1

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1758. She says about the lord of Thirunāgai, “O friend, he, the god of the gods who taught the Vedās to the sages with a shining golden body and a chest adorned with emerald ornaments shining like lightning stares at me, my waist and my round young breasts. If mother sees, what will she do? I am afraid of her. Acho, how can I describe his beauty!”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழீ! தோழியே!; இவர் மேனி எம்பெருமானின் சரீரம்; பொன் பொன் போலிருக்கிறது; அகலத்து மார்பிலிருக்கும்; ஆரம் ஆரத்திலுள்ள; மரகதத்தின் மரகதத்தின்; பொங்கி பச்சை நிறம்; மின் இளஞ் மின்னல் போல்; சோதி பிரகாசிக்கிறது; இவர் வாயில் இவர் வாயால்; நல் வேதம் நல்ல சாம வேதம்; ஓதும் ஓதும் போது; வேதியர் இவர் வேதியரோ?; வானவர் அல்லது தேவரோ என்று தோன்றுகிறது; என்னையும் நோக்கி என்னையும் நோக்கி; என் அல்குல் என் இடையையும்; நோக்கி குளிர நோக்கி; ஏந்து இளங் கொங்கையும் என் மார்பகங்களையும்; நோக்குகின்றார் பார்க்கின்றார்; அன்னை என் நோக்கும் தாய் என்னநினைப்பாளோ; என்று அஞ்சுகின்றேன் என்று பயப்படுகிறேன்; அழகியவா! ஒருவர் இவருடைய ஒப்பற்ற அழகை; அச்சோஆவர் என்னவென்று கூறுவேன்!