This is the Place of Him Who Took the Kṛṣṇa Incarnation
கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் இடம் இது
1755 அரவுநீள்கொடியோன்அவையுள்ஆசனத்தை
அஞ்சிடாதேயிட * அதற்குப்
பெரியமாமேனிஅண்டமூடுருவப்
பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன் *
வரையின்மாமணியும்மரதகத்திரளும்
வயிரமும்வெதிருதிர்முத்தும் *
திரைகொணர்ந்துந்திவயல்தொறும்குவிக்கும்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.