This is the Abode of Him Who Took the Vāmana Incarnation
வாமனாவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
1752 மன்னவன்பெரியவேள்வியில்குறளாய்
மூவடிநீரொடும்கொண்டு *
பின்னும்ஏழுலகும்ஈரடியாகப்
பெருந்திசையடங்கிடநிமிர்ந்தோன் *
அன்னமென்கமலத்தணிமலர்ப்பீடத்து
அலைபுனலிலைக்குடைநீழல் *
செந்நெலொண்கவரியசையவீற்றிருக்கும்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.