If These are Read, Poverty Will Never Come
இவற்றைப் படித்தால் வறுமையே வராது
1757 கலையுலாவல்குல்காரிகைதிறத்துக்
கடல்பெரும்படையொடும்சென்று *
சிலையினால்இலங்கைதீயெழச்செற்ற
திருக்கண்ணங்குடியுள்நின்றானை *
மலைகுலாமாடமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
உலவுசொல்மாலைஒன்பதோடொன்றும்
வல்லவர்க்குஇல்லைநல்குரவே. (2)