This is the Abode of Him Who Took the Varāha Incarnation
வராகவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
1751 வென்றிசேர்திண்மைவிலங்கல்மாமேனி
வெள்ளெயிற்றொள்ளெரித்தறுகண் *
பன்றியாய்அன்றுபார்மகள்பயலை
தீர்த்தவன் பஞ்சவர்பாகன் *
ஒன்றலாஉருவத்துஉலப்பில்பல்காலத்து
உயர்கொடிஒளிவளர்மதியம் *
சென்றுசேர்சென்னிச்சிகரநன்மாடத்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.