PT 7.7.1

ஆமருவியப்பா! நீயே அடைக்கலம்

1608 திருவுக்கும்திருவாகியசெல்வா!
தெய்வத்துக்கரசே! செய்யகண்ணா! *
உருவச்செஞ்சுடராழிவல்லானே!
உலகுண்டஒருவா! திருமார்பா! *
ஒருவற்காற்றியுய்யும் வகையென்றால்
உடன்நின்றுஐவர்என்னுள்புகுந்து * ஒழியாது
அருவித்தின்றிடஅஞ்சிநின்னடைந்தேன்
அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே! (2)
1608 ## tiruvukkum tiru ākiya cĕlvā *
tĕyvattukku arace cĕyya kaṇṇā *
uruvac cĕñ cuṭar āzhi vallāṉe *
ulaku uṇṭa ŏruvā tiru mārpā **
ŏruvaṟku āṟṟi uyyum vakai ĕṉṟāl *
uṭaṉ niṉṟu aivar ĕṉṉul̤ pukuntu * ŏzhiyātu
aruvit tiṉṟiṭa añci niṉ aṭainteṉ *
azhuntūr mel ticai niṉṟa ammāṉe-1

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1608. You, our lovely Kannan, the wealth of all wealth, carry a strong shining discus and embrace beautiful Lakshmi on your chest. You are the king of the gods, the unique one and you swallowed the world. Always, the feelings of the five senses enter me and torment me— even one of them is enough to hurt me and so, frightened of them, I come to you, my father. You stay in Thiruvazhundur facing west.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
திருவாகிய செல்வமாகிய; திருவுக்கும் செல்வத் திருமகளுக்கு; செல்வா! லக்ஷ்மிகரனான செல்வனே!; தெய்வத்துக்கு அரசே! தேவர்களுக்கும் தலைவனே!; செய்ய கண்ணா! சிவந்த கண்களையுடையவனே!; உருவச் செஞ் சுடர்! ஒளிமயமான சிவந்த; ஆழி வல்லானே சக்கரத்தையுடையவனே!; உலகு உண்ட ஒருவா! உலகங்களை உண்டவனே!; திருமார்பா! மஹாலக்ஷ்மியை மார்பில் உடையவனே!; அழுந்தூர் மேல் திசை திருவழுந்தூரில் மேல் திசையில்; நின்ற அம்மானே இருக்கும் பெருமானே!; ஒருவற்கு ஆற்றி ஒரு இந்திரியத்துக்கு ஆட்பட்டே; உய்யும் தப்பிப் பிழைக்கும்; வகை இன்றால் வழி இல்லை என்றால்; ஐவர் ஐந்து இந்திரியங்கள்; உடன் நின்று உடன் நின்று; என்னுள் புகுந்து என்னுள் புகுந்து; ஒழியாது ஓயாமல் எப்போதும்; அருவித் தின்றிட துயரப்படுத்துகின்றனவே; அஞ்சி அதற்கு அஞ்சி; நின் அடைந்தேன் உன்னைச் சரண் அடைந்தேன்