PT 7.7.2

ஆமருவியப்பா! நின்னையே நான் சரணடைந்தேன்

1609 பந்தார்மெல்விரல்நல்வளைத்தோளி
பாவைபூமகள்தன்னொடும்உடனே
வந்தாய் * என்மனத்தேமன்னிநின்றாய்
மால்வண்ணா! மழைபோலொளிவண்ணா! *
சந்தோகா! பௌழியா! தைத்திரியா!
சாமவேதியனே! நெடுமாலே! *
அந்தோ! நின்னடியன்றிமற்றறியேன்
அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே!
1609 pantu ār mĕl viral nal val̤ait tol̤i *
pāvai pū-makal̤-taṉṉŏṭum uṭaṉe
vantāy * ĕṉ maṉatte maṉṉi niṉṟāy *
māl vaṇṇā mazhaipol ŏl̤i vaṇṇā **
cantokā pauzhiyā taittiriyā *
cāma vetiyaṉe nĕṭumāle *
anto niṉ aṭi aṉṟi maṟṟu aṟiyeṉ- *
azhuntūr mel ticai niṉṟa ammāṉe-2

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1609. You came into my heart and stay firmly there with the soft-fingered earth goddess lovely as a doll, ornamented with beautiful armlets. Dark-colored and shining as bright as a cloud, you are the Chandogya Upanishad, the Rig Vedā, the Taittiriya Upanishad and the god of the Sama Vedā. You are my mother, O tall Nedumal and you stay in Thiruvazhundur facing west.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பந்து ஆர் பந்து பிடித்திருக்கும்; மெல் விரல் மிருதுவான விரல்களை யுடையளும்; நல் வளை நல்ல வளையல்களையுடைய; தோளி தோள்களை உடையவளும்; பாவை பதுமை போன்றவளுமான; பூ மகள் தன்னொடும் திருமகளுடன்; உடனே வந்தாய்! உடனே வந்தாய் வந்து; என் மனத்தே என் மனத்தில்; மன்னி நின்றாய்! வந்து நின்றவனே!; மால் வண்ணா! கருத்த நிறத்தை யுடையவனே!; மழை போல் மேகம் போன்று; ஒளி வண்ணா! குளிர்ந்த ஒளியுடையவனே!; சந்தோகா! சாந்தோக்ய உபநிஷதர்த்தத்தை அறிந்தவனே!; பௌழியா! ப்ருஹதாரண்யக உபநிஷதர்த்தத்தை அறிந்தவனே!; தைத்திரியா! தைத்திரிய உபநிஷதர்த்தத்தை அறிந்தவனே!; சாமவேதியனே! சாமவேதர்த்தத்தை அறிந்தவனே!; நெடுமாலே! ஸர்வஜ்ஞனே!; அழுந்தூர் மேல் திசை அழுந்தூர் மேல் திசையில்; நின்ற அம்மானே! இருக்கும் பெருமானே!; அந்தோ! அந்தோ!; நின் அடி அன்றி உன் திருவடியைத் தவிர; மற்று அறியேன் வேறொரு புகலை அறியேன்