PT 7.4.6

சாரநாதன் திருவடிகளே எனக்குத் துணை

1583 பண்டுஏனமாய்உலகை அன்றிடந்த
பண்பாளாஎன்றுநின்று *
தொண்டானேன் திருவடியேதுணையல்லால்
துணையில்லேன்சொல்லுகின்றேன் *
வண்டேந்தும்மலர்ப்புறவில் வண்சேறை
எம்பெருமானடியார்தம்மை *
கண்டேனுக்குஇதுகாணீர்என்நெஞ்சம்
கண்ணிணையும்களிக்குமாறே.
1583 பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த *
பண்பாளா என்று நின்று *
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் *
துணை இலேன் சொல்லுகின்றேன் **
வண்டு ஏந்தும் மலர்ப் புறவில் * வண் சேறை
எம் பெருமான் அடியார் தம்மை *
கண்டேனுக்கு இது காணீர் * என் நெஞ்சும்
கண் இணையும் களிக்கும் ஆறே 6
1583 paṇṭu eṉam āy ulakai aṉṟu iṭanta *
paṇpāl̤ā ĕṉṟu niṉṟu *
tŏṇṭu āṉeṉ tiruvaṭiye tuṇai allāl *
tuṇai ileṉ cŏllukiṉṟeṉ **
vaṇṭu entum malarp puṟavil * vaṇ ceṟai
ĕm pĕrumāṉ aṭiyār-tammai *
kaṇṭeṉukku itu kāṇīr * ĕṉ nĕñcum
kaṇ iṇaiyum kal̤ikkum āṟe-6

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1583. I praise him saying, “You are an excellent god. In ancient times as a boar you dug up the earth, brought the earth goddess up and saved her. ” I am his servant and have no help but him who stays in Thiruthancherai surrounded with blooming groves swarming with bees. When I see his devotees, my heart and my eyes feel joy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பண்டு ஏனமாய் முன்பு வராஹமாய்; உலகை உலகை அண்டத்திலிருந்து; அன்று இடந்த குத்தி எடுத்து காத்த; பண்பாளா! பண்பாளா!; என்று நின்று என்று சொல்லி; தொண்டு உன் பாதங்களை; ஆனேன் பற்றினேன்; திருவடியே உன் திருவடியே; துணை அல்லால் துணை அதைத்தவிர; துணை வேறு எதையும் துணையாக; அல்லால் இல்லேன் பற்றிலேன் என்று; சொல்லுகின்றேன் சொல்லுகின்றேன் இது உண்மை; வண்டு ஏந்தும் வண்டுகளிருக்கும்; மலர்ப் புறவில் பூஞ்சோலையுடைய; வண் சேறை அழகிய திருச்சேறை; எம்பெருமான் பெருமானின்; அடியார் தம்மை பக்தர்களை; கண்டேனுக்கு வணங்கிய; என் நெஞ்சும் என் மனமும்; கண் இணையும் இரண்டு கண்களும்; களிக்கும் ஆறே களிப்பதை; இது காணீர் இங்கு பாருங்கள்