PT 7.4.5

சாரநாதன் அடியார்களே எனக்கு இனியவர்

1582 வந்திக்கும்மற்றவர்க்கும் மாசுடம்பில்
வல்லமணர்தமக்கும்அல்லேன் *
முந்திசென்றரியுருவாய்இரணியனை
முரணழித்தமுதல்வர்க்கல்லால் *
சந்தப்பூமலர்ச்சோலைத்
தண்சேறையெம்பெருமான்தாளை * நாளும்
சிந்திப்பார்க்குஎன்னுள்ளம்
தேனூறிஎப்பொழுதும்தித்திக்குமே.
1582 vantikkum maṟṟavarkkum * mācu uṭampiṉ
val amaṇar tamakkum alleṉ *
muntic cĕṉṟu ari uru āy * iraṇiyaṉai
muraṇ azhitta mutalvarkku allāl- **
cantap pū malarc colait * taṇ ceṟai
ĕm pĕrumāṉ tāl̤ai * nāl̤um
cintippārkku ĕṉ ul̤l̤am * teṉ ūṟi
ĕppŏzhutum tittikkume-5

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1582. I will not worship the Jains with their dirty bodies or the Buddhists with their incessant arguing, I will only worship those who praise the god who took the form of a man-lion, fought with Hiranyan and killed him. My heart will be sweet always as if honey poured from it, when it thinks of the devotees of the lord, who worship the feet of our god of Thiruthancherai, surrounded with fragrant blooming groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரி உருவாய் நரசிம்மமாய்; முந்திச் சென்று முன்னே சென்று; இரணியனை இரணியனின்; முரண் அழித்த பலம் அழித்த; முதல்வர்க்கு முதல்வனான பெருமானுக்கு; அல்லால் அல்லால்; மாசு அழுக்கு; உடம்பின் உடம்பையுடையவர்களும்; வல் வலிந்து வாது செய்பவர்களுமான; அமணர் தமக்கும் ஜைனர்களுடனும்; வந்திக்கும் தங்கள் தேவதைகளை வணங்கும்; மற்றவர்க்கும் மற்றவர்களுடனும் [பெளத்தர்களுடனும்]; அல்லேன் சேரமாட்டேன்; சந்தப் பூ மலர் சந்தண மலர்; சோலை சோலைகளையுடைய; தண் சேறை குளிர்ந்த திருச்சேறை; எம்பெருமான் பெருமானின்; தாளை நாளும் பாதங்களை நாள்தோறும்; சிந்திப்பார்க்கு சிந்திப்பவர்க்கு; என் உள்ளம் என் உள்ளம்; தேன் ஊறி தேன் ஊறி; எப்பொழுதும் எப்பொழுதும்; தித்திக்குமே தித்திக்குமே