Your browser does not support the audio element.
audio
1478 கண்ணும்சுழன்றுபீளையோடு ஈளைவந்தேங்கினால் *
பண்ணின்மொழியார் பையநடமினென்னாதமுன் *
விண்ணும்மலையும் வேதமும்வேள்வியுமாயினான் *
நண்ணுநறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே! (2)
1479 கொங்குண்குழலார் கூடியிருந்துசிரித்து * நீர்
இங்கென்? இருமி எம்பால்வந்ததென்றிகழாதமுன் *
திங்களெரிகால் செஞ்சுடராயவன்தேசுடை *
நங்கள்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1480 கொங்கார்குழலார் கூடியிருந்துசிரித்து * எம்மை
எங்கோலம்ஐயா! என்? இனிக்காண்பதுஎன்னாதமுன் *
செங்கோல் வலவன்தான் பணிந்தேத்தித்திகழுமூர் *
நங்கோன்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1481 கொம்பும் அரவமும் வல்லியும்வென்றநுண்ணேரிடை *
வம்புண்குழலார் வாசலடைத்துஇகழாதமுன் *
செம்பொன்கமுகினம் தான்கனியும்செழுஞ்சோலைசூழ் *
நம்பன்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1482 விலங்கும்கயலும் வேலும்ஒண்காவியும்வென்றகண் *
சலம்கொண்டசொல்லார்தாங்கள் சிரித்துஇகழாதமுன் *
மலங்கும்வராலும் வாளையும்பாய்வயல்சூழ்தரு *
நலங்கொள்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1483 மின்னேரிடையார்வேட்கையைமாற்றியிருந்து *
என்நீர்இருமி எம்பால்வந்தது? என்றுஇகழாதமுன் *
தொன்னீரிலங்கைமலங்க விலங்கெரியூட்டினான் *
நன்னீர்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1484 வில்லேர்நுதலார் வேட்கையைமாற்றிச் சிரித்து * இவன்
பொல்லான்திரைந்தானென்னும் புறனுரை கேட்பதன்முன் *
சொல்லார்மறைநான்கோதி உலகில்நிலாயவர் *
நல்லார்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1485 வாளொண்கண்நல்லார்தாங்கள் மதனனென்றார்தம்மை *
கேளுமின்கள்ஈளையோடு ஏங்குகிழவனென்னாதமுன் *
வேள்வும்விழவும் வீதியில்என்றும்அறாதவூர் *
நாளுநறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1486 கனிசேர்ந்திலங்குநல்வாயவர் காதன்மைவிட்டிட *
குனிசேர்ந்துடலம் கோலில்தளர்ந்துஇளையாதமுன் *
பனிசேர்விசும்பில் பான்மதிகோள்விடுத்தானிடம் *
நனிசேர்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1487 பிறைசேர் நுதலார் பேணுதல்நம்மையிலாதமுன் *
நறைசேர்பொழில்சூழ் நறையூர் தொழுநெஞ்சமே! என்ற *
கறையார்நெடுவேல்மங்கையர்கோன் கலிகன்றிசொல் *
மறவாதுரைப்பவர் வானவர்க்குஇன்னரசாவரே. (2)