Your browser does not support the audio element.
audio
1318 கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் * காமருசீர்க்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும் *
தவளமாடநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும் *
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே. (2)
1319 கஞ்சன்விட்டவெஞ்சினத்த களிறடர்த்தகாளையென்றும் *
வஞ்சமேவிவந்தபேயின் உயிரையுண்டமாயனென்றும் *
செஞ்சொலாளர்நீடுநாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பஞ்சியன்னமெல்லடியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1320 அண்டர்கோன்என்னானையென்றும் ஆயர்மாதர்கொங்கைபுல்கு
செண்டனென்றும் * நான்மறைகள்தேடியோடும் செல்வனென்றும் *
வண்டுலவுபொழில்கொள்நாங்கை மன்னுமாயனென்றென்றோதி *
பண்டுபோலன்றுஎன்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1321 கொல்லையானாள்பரிசழிந்தாள் கோல்வளையார்தம் முகப்பே *
மல்லைமுந்நீர்தட்டிலங்கை கட்டழித்தமாயனென்றும் *
செல்வம்மல்குமறையோர்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பல்வளையாள்என்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1322 அரக்கராவிமாளஅன்று ஆழ்கடல்சூழிலங்கைசெற்ற *
குரக்கரசனென்றும் கோலவில்லியென்றும் * மாமதியை
நெருக்குமாடநீடுநாங்கை நின்மலன்தானென்றென்றோதி *
பரக்கழிந்தாள்என்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1323 ஞாலமுற்றும்உண்டுமிழ்ந்த நாதனென்றும் * நானிலம்சூழ்
வேலையன்னகோலமேனி வண்ணனென்றும் * மேலெழுந்து
சேலுகளும்வயல்கொள்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பாலின்நல்லமென்மொழியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1324 நாடிஎன்தன்உள்ளம்கொண்ட நாதனென்றும் * நான்மறைகள்
தேடியென்றும்காணமாட்டாச் செல்வனென்றும் * சிறைகொள்வண்டு
சேடுலவுபொழில்கொள்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பாடகம்சேர்மெல்லடியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1325 உலகமேத்தும்ஒருவனென்றும் ஒண்சுடரோடுஉம்பரெய்தா *
நிலவும்ஆழிப்படையனென்றும் நேசனென்றும் * தென்திசைக்குத்
திலதமன்னமறையோர்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பலருமேசஎன்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1326 கண்ணனென்றும் வானவர்கள்காதலித்துமலர்கள்தூவும் *
எண்ணனென்றும் இன்பனென்றும்ஏழுலகுக்காதிஎன்றும் *
திண்ணமாடநீடுநாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பண்ணினன்னமென்மொழியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1327 பாருள்நல்லமறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளிச்செங்கண்மாலை *
வார்கொள்நல்லமுலைமடவாள்பாடலைத் தாய்மொழிந்தமாற்றம் *
கூர்கொள்நல்லவேல்கலியன் கூறுதமிழ்பத்தும்வல்லார் *
ஏர்கொள்நல்லவைகுந்தத்துள் இன்பம்நாளும் எய்துவாரே. (2)